TNPSC-General Knowledge Preparation November 2016-Part 2 (நாட்டு நடப்பு தெரியுமா உங்களுக்கு...)

புகையிலைக்கு எதிரான 7வது சர்வதேச மாநாடு எங்கு நடக்க உள்ளது?இந்தியா

பிரதான் மந்திரி சுரக்ஷித் மட்ரிட்வா அபியான் என்னும் சமீபத்திய திட்டம் எதோடு தொடர்புடையது?
கர்ப்பிணிப் பெண்களுக்கான உடல்நல திட்டம். கருவுற்றிருக்கும் பெண்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனைகளை இது உள்ளடக்கியது.

வரும் டிசம்பரில் நடக்க உள்ள துபாய் பன்னாட்டு திரைப்பட விழாவில் எந்த இந்திய நட்சத்திரம் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற உள்ளார்?
ரேகா

மனிதர் உருவாக்கியதில் ஆசியா கண்டத்தின் மிகப் பெரிய ஜங்கிள் சவாரியை எங்கு மேற்கொள்ள முடியும்?
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நயா ராய்ப்பூர் வனவிலங்கு பாதுகாப்பகம்

சம்பளம் பெரும் வேலையில் உள்ளவருக்கான வீட்டு கடன் திட்டத்தில் ஓவர் டிராப்ட் வசதியை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள வங்கி எது?
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி

உலக வெஜிடேரியன் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
நவம்பர் 1

சவுர் சுஜாலா யோஜனா என்னும் திட்டம் சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரதமரால் துவங்கப்பட்டது. இதன் நோக்கம் என்ன?
இது மானியத்துடன் கூடிய சூரிய ஒளியால் இயங்கும் மின் மோட்டார்களை விவசாயிகளுக்குத் தரும் திட்டம்

இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சைபர் போலீஸ் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன?
மகாராஷ்டிரா

எந்த மாநிலங்களில் திறந்தவெளி மலம் கழிப்பது அறவே இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது?
கேரளா, இமாச்சலபிரதேசம், சிக்கிம்.

'மெக்ஸிகன் கிராண்ட்பிரி' சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
லீவிஸ் ஹாமில்டன்

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.