TNPSC-General Knowledge Preparation October 2016-Part 2 (நாட்டு நடப்பு தெரியுமா உங்களுக்கு...)

'தி மினிஸ்ட்ரி ஆப் அட்மோஸ்ட் ஹாப்பினஸ்' என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்? அருந்ததி ராய்

2016ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசு யாருக்கு தரப்பட்டுள்ளது?
கொலம்பியா அதிபர் ஜுவான் மேனுவல் சாண்டோஸ். இவர் அந்த நாட்டில் நடைபெற்று வந்த உள்நாட்டு கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியை உருவாக்கியதால் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காமன்வெல்த் நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு எங்கு நடந்தது?
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள ஐ.எம்.எப்., தலைமையகத்தில் நடந்தது.

சமீபத்தில் மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மேக்ஸ் வாக்கர் எந்த நாட்டை சேர்ந்தவர்
ஆஸ்திரேலியா

2017ம் ஆண்டில் நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தலில் இளைய வாக்காளர்களை கவர நமது தேர்தல் ஆணையம் எந்த சமூக வலைதள நிறுவனத்தோடு கை கோர்த்துள்ளது?
பேஸ்புக்

அன்டோனியோ குட்டரஸ் யார்?
போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் அதிபர். ஐ.நா., சபையின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

'ஹரித கேரளம்' என்னும் கேரள மாநிலத்தின் புதிய தூய்மை திட்டத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
பாடகர் ஜேசுதாஸ்

சமீபத்தில் மியான்மரில் தனது கிளையை துவங்கி உள்ள இந்திய வங்கி எது?
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

சமீபத்தில் உலகில் முதன் முதலாக ஓட்டுநர் இல்லாத பஸ் சேவையை துவக்கிய நாடு எது
பிரான்ஸ

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.