TNPSC-General Knowledge Preparation October 2016-Part 1 (நாட்டு நடப்பு தெரியுமா உங்களுக்கு...)

* சமீபத்தில் ஸ்காட்சாட்-1 என்னும் இந்திய கடல் ஆராய்ச்சி மற்றும் வானிலை பயன்பாட்டுக்கான செயற்கைக்கோளை ஐ. எஸ். ஆர். ஓ., வெற்றிகரமாக ஏவியதை அறிவோம். இதை ஏவிய பி. எஸ்.எல்.வி., ராக்கெட் அதற்கு முந்தைய ராக்கெட்டுகளை விட எப்படி வேறுபட்டது? முதன் முதலாக பி. எஸ். எல்.வி., ராக்கெட் இரண்டு வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் கொண்டு சென்ற செயற்கை கோள்களை நிறுவியது

* பிரிக்ஸ் யு-17 கால்பந்து போட்டிகள் எங்கு நடைபெற உள்ளன?
கோவாவில்

* 2018, 2022 மற்றும் 2026 ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளன?
2018 - இந்தோனேசியா; 2022 - சீனாவில் உள்ள ஹாங்சூ; 2026 - ஜப்பான்

* எல். இ.டி., விளக்குகளாக அனைத்தையும் மாற்றும் மத்திய அரசின் தேசிய தெருவிளக்கு திட்டத்தை முதன் முதலில் நடைமுறைப் படுத்திய மாநிலம் எது?
ராஜஸ்தான்

* வியட்நாமில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய பீச் விளையாட்டுகளில் தங்கம் வென்ற பெண்கள் அணி எது?
இந்தியா

* ஐ. எஸ்., ஆர். ஓவுடன் இணைந்து கல்வியை மேம்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநிலம் எது?
தெலுங்கானா

* 2017ம் ஆண்டுக்கான 17 வயத்துக்குட்பட்டவருக்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் எங்கு நடைபெற உள்ளன?
இந்தியாவில் 2017ல்

* GLOBAL COMPETITIVE INDEX எனப்படும் தர வரிசையில் இந்தியாவின் நிலை என்ன? இதில் முதல் 3 இடங்களில் உள்ள நாடுகள் எவை?
138 நாடுகள் இடம் பெற்ற இந்த பட்டியலில் இந்தியாவின் தரம் 39.இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஸ்விட்சர்லாந்தும், 2ம் இடத்தில் சிங்கப்பூரும் 3 வது இடத்தில் அமெரிக்காவும் உள்ளன.

கார்பன் மாசு இல்லாத விமான நிலையம் என்ற அந்தஸ்தை சமீபத்தில் பெற்ற விமான நிலையம் எது?
புது டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம். விளையிடப்படும் கார்பனின் அளவை உறிஞ்சி எடுத்து கார்பன் வெளிப்பாடே இல்லாததாக மாற்றும் அளவை கொண்டு சர்வதேச விமானநிலைய கவுன்சில் இந்த அந்தஸ்தை அந்த விமான நிலையத்துக்கு சமீபத்தில் கொடுத்துள்ளது. ஆசிய பசிபிக் பகுதியில் இந்த அந்தஸ்தை பெரும் முதல் விமான நிலையம் டில்லி விமான நிலையமாகும்.

சமீபத்தில் மறைந்த கே. மாதவன் எதற்காக அறியப் படுகிறார்?
கேரளாவை சேர்ந்த 101 வயது மாதவன் ஒரு விடுதலை போராட்ட வீரர்.

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.