TNPSC-General Knowledge Preparation November 2016-Part 3 (நாட்டு நடப்பு தெரியுமா உங்களுக்கு...)

இந்திய மகளிரின் திருவிழா என்ற பெயரில் நடத்தப்படும் பெண்களுக்கான நிகழ்வு எங்கு நடக்கிறது?புதுடில்லி. இது இந்திய பெண்கள் தயாரித்துள்ள ஆர்கானிக் பொருட்களுக்கான திருவிழா. அக்., 14 முதல் 23 வரை நடக்கிறது.

உலக தர நாள் என்று கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் 14

ஜி.மகாலிங்கம் சமீபத்தில் எதனால் செய்திகளில் இடம் பெற்றார்?
செபி அமைப்பின் முழு நேர உறுப்பினராக இவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

பேரிடர் அபாய குறைப்புக்கான ஐ.நா.,வின் தலைமையகம் எங்குள்ளது?
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா

அதிவேக ரயில் தயாரிப்பில் எந்த நாட்டுடன் இந்தியா சமீபத்தில் இணைந்துள்ளது?
ஜெர்மனி

நோபல் இலக்கிய பரிசை சமீபத்தில் அமெரிக்காவின் புகழ் பெற்ற பாடகர் பாப் டிலான் வென்றார். இந்த பரிசு தொகை எவ்வளவு?
6 கோடி ரூபாய்

வெகு வேகமாக அவுட்டோர் மைதானத்தில் இருந்து இன்டோர் மைதானமாக மாற்றக் கூடிய மைதானம் இந்தியாவில் எங்கு சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
ஆமதாபாத்

முதல் முதலில் உலக சுனாமி விழிப்புணர்வு தினம் என்று கடைப்பிடிக்கப்பட உள்ளது?
2016 நவம்பர் 5

தொலை தூர மற்றும் அதி உயர ரிமோட் ஆய்வுக் கூடம் 'ஹிமான்ஷ்' எங்கு சமீபத்தில் நிறுவப்பட்டது?
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்பிடி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

IAEA என்னும் பன்னாட்டு அணுசக்தி நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?
பாரிஸ்

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.