TNPSC-VAO-GROUP-IV-GOVT-EXAM-Question Answers 17-01-2017 (டி.என்.பி.எஸ்.சி. வினா விடை)

16) புருஷ சுத்தத்தில் கூறப்பட்டுள்ளது
அ)வேதஞானிகள் பிரபஞ்சத்திற்கு பின்னால் இருக்கின்ற படைப்பாற்றலைக் கண்டுபிடிக்கும் முயற்சி
ஆ)பிரபஞ்சத்தின் படைப்புப் புதிரை மிக்க தைரியத்தோடு வேத ஞானிகள் கண்டுபிடிக்கும் முயற்சி
இ) இரண்டும் ஈ) எதுவுமில்லை

17) 'உபநிஷத்' என்ற சொல்லில் உள்ள 'உப', 'நி', 'ஷத்' என்ற சொற்றொடர்களின் வேர்ப்பொருள்:
அ) 'உப' என்பதற்கு 'பக்தியோடு' என்றும், 'நி' என்பதற்கு 'அருகில்' என்றும் 'ஷத்' என்பது 'உட்காருதல்' எனவும் பொருள்படும்
ஆ) 'உப' என்பதற்கு 'உட்காருதல்' எனவும் 'நி' என்பதற்கு 'பக்தியோடு' என்றும் 'ஷத்' என்பதற்கு 'அருகில்' என்றும் பொருள்படும்
இ) 'உப' என்பதற்கு 'அருகில்' எனவும் 'நி' என்பதற்கு 'பக்தியோடு' என்றும் 'ஷத்' என்பதற்கு 'உட்காருதல்' என்றும் பொருள்படும்
ஈ) 'உப' என்பதற்கு 'உட்காருதல்' எனவும் 'நி' என்பதற்கு 'அருகில்' என்றும் 'ஷத்' என்பதற்கு 'பக்தியோடு' என்றும் பொருள்படும்.

18) பொருத்துக
அ. அண்டஜா 1) பூமியிலிருந்து தோன்றியது
ஆ. ஜீவஜா 2) வியர்வையிலிருந்து தோன்றியது
இ. உத்பிஜ்ஜா 3) முட்டையிலிருந்து தோன்றியது
ஈ. சுவேதாஜா 4) உயிர்மத்திலிருந்து தோன்றியது
அ ஆ இ ஈ
அ. 3 1 4 2
ஆ. 1 4 3 2
இ. 4 2 1 3
ஈ. 3 4 2 1

19) பிரம்மனின் தன்மை சாத்வீகமானது எனக்குறிப்பிடுபவர்
அ) கௌடில்யர் ஆ) மனு இ) இருவரும் ஈ) யாருமில்லை

20) வேதாந்தம் என்ற சொல்லின் நேர்ப்பொருள்
அ) வேதத்தின் முற்பகுதியை குறிக்கிறது
ஆ) வேள்விகளின் தன்மையைப்புரிந்து கொள்ளுதல்
இ) வேதத்தின் இறுதிப்பகுதி
ஈ) இவை அனைத்தும்

21. ஆனந்ததீர்த்தர் என்று வேறொரு பெயருடைய இவர்
துவைத்சித்தாந்தத்தை உருவாக்கினார் ?
அ) மத்துவாச்சாரியார் ஆ) வல்லபாச்சாரியார்
இ) ஆனந்த கோஸ்வாமி ஈ) இராமானுஜாச்சாரியார்

22. மருதுபிரானை வளர்ப்புப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டவர்
அ) பட்டினத்தார் ஆ) தாயுமானவர்
இ) அருணகிரிநாதர் ஈ) பாம்பன் சுவாமிகள்
- தொடரும்

விடைகள்: 16) அ 17) இ 18) ஈ 19) ஆ 20) இ 21) அ 22) அ

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.