பொது அறிவு, General Knowledge GK, TNPSC Model Questions June 14 2010

1. எலக்ட்ரானிக் நகரம் என அழைக்கப்படும் நகரம்?
அ) கோல்கட்டா ஆ) மும்பை
இ) வாரணாசி ஈ) பெங்களூரு

2. பூமியின் தோராய சுற்றளவு எவ்வளவு?
அ) 16 ஆயிரம் கி.மீ ஆ) 25 ஆயிரம் கி.மீ
இ) 40 ஆயிரம் கி.மீ ஈ) 50 ஆயிரம் கி.மீ

3. பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்?
அ) சையது அகமது கான் ஆ) முகமது அலி ஜின்னா
இ) முகமது இக்பால் ஈ) அபுல் கலாம் ஆசாத்

4. ஏவுகணையில் பயன்படுத்தப்படும் எரிபொருள் என்ன?
அ) டைமெத்தில் ஹைட்ரசீன் ஆ) திரவ ஆக்ஸிஜன்
இ) திரவ ஹைட்ரஜன் ஈ) ஹைட்ரஜன் பெராக்ஸைடு

5. இஞ்சி என்பது ஒரு வகை?
அ) நீர்வாழ் தாவரம் ஆ) தரைகீழ் தண்டு
இ) உணவு சேமிக்கும் வேர் ஈ) பற்றுக் கொடி

6. மரபியலின் தந்தை என அழைக்கப்படுபவர்?
அ) கிரிகோர் மென்டல் ஆ) ம்யூல்லர்
இ) சார்லஸ் டார்வின் ஈ) ராபர்ட் ஹூக்

7. வாதாபி யாருடைய தலைநகரம்?
அ) பல்லவர்கள் ஆ) கூர்ஜா பிரதிகாரர்கள்
இ) கங்கர்கள் ஈ) சாளுக்கியர்கள்

8. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்படுபவர்?
அ) லாலா லஜபதிராய் ஆ) பகத் சிங்
இ) படேல் ஈ) ஜே.பி.நாராயணன்

9. தமிழகத்தில் உயரமான சிகரம் எது?
அ) ஆனை மலை ஆ) ஆனை முடி
இ) ஏற்காடு ஈ) தொட்ட பெட்டா

10. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண்மணி?
அ) ஆஷா பாண்டே ஆ) கல்பனா ராய்
இ) கல்பனா சாவ்லா ஈ) அருந்ததி ராய்

11. பஞ்சாயத்து தலைவரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
அ) 3 ஆண்டுகள் ஆ) 4 ஆண்டுகள்
இ) 5 ஆண்டுகள் ஈ) 6 ஆண்டுகள்

12. கர்நாடக மாநிலத்தின் முக்கிய பண்டிகை எது?
அ) தீபாவளி ஆ) தசரா
இ) பொங்கல் ஈ) ஓணம்

13. காந்திஜியின் அரசியல் குரு யார்?
அ) தாதாபாய் நௌரோஜி ஆ) திலகர்
இ) லாலா லஜபதிராய் ஈ) கோகலே

14. மிகவும் பழமையான வம்சம் எது?
அ) மவுரிய வம்சம் ஆ) சுங்க வம்சம்
இ) குஷான் வம்சம் ஈ) கன்வா வம்சம்

15. ரோமானிய நாகரிகத்தின் சிதைவுகள் காணப்படும் இடம்?
அ) அரிக்காமேடு ஆ) ஹம்பி
இ) மொகஞ்சதாரோ ஈ) லோதால்

விடைகள்: 1.(ஈ), 2.(இ), 3.(இ), 4.(ஆ), 5.(ஆ), 6.(அ), 7.(ஈ), 8.(அ),
9.(ஈ), 10.(இ), 11.(இ), 12.(ஆ), 13.(ஈ), 14.(அ), 15.(அ)

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.