பொது அறிவு -General Knowledge GK -TNPSC Model Questions with Answers July 06 2010

1. இந்தியாவில் உச்சநீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
அ) 1950 ஆ) 1953
இ) 1947 ஈ) 1960

2. இந்திய யூனியன் பகுதிகளை நிர்வகிப்பவர்
அ) பிரதமர் ஆ) குடியரசுத் தலைவர்
இ) கவர்னர் ஈ) பாதுகாப்பு அமைச்சர்

3. அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து யாருடைய வரலாற்றை அறியலாம்?
அ) ஹர்ஷவர்த்தனர் ஆ) காரவேலர்
இ) அசோகர் ஈ) சமுத்திர குப்தர்

4. நெருப்பின் உபயோகம் கண்டறியப்பட்ட காலம்
அ) பழைய கற்காலம் ஆ) உலோகக் காலம்
இ) புதிய கற்காலம் ஈ) இடைக் கற்காலம்

5. வேதகால மக்களின் முக்கியத் தொழில்
அ) வேட்டையாடுதல் ஆ) விவசாயம்
இ) கால்நடை வளர்த்தல் ஈ) வர்த்தகம்

6. ராமாயணத்தின் மூலத்தை எழுதியவர்
அ) கீர்த்தி தாஸ் ஆ) காசிராம்தாஸ்
இ) துளசி தாஸ் ஈ) வால்மீகி

7. பாசிஸக் கொள்கையைத் துவக்கியவர்
அ) முசோலினி ஆ) ரூஸோ
இ) ஹிட்லர் ஈ) நெப்போலியன்

8. அக்பரின் பாதுகாவலர் யார்?
அ) பீர்பால் ஆ) தோடர்மால்
இ) நூர்ஜஹான் ஈ) பைராம்கான்

9. காந்தியடிகளின் அரசியல் குருநாதர் யார்?
அ) திலகர் ஆ) லாலா லஜபதிராய்
இ) கோகலே ஈ) நேரு

10. சுப்பிரமணிய பாரதி நடத்தி வந்த தமிழ் நாளேடு
அ) நியூ இந்தியா ஆ) இந்தியா
இ) யங் இந்தியா ஈ) தமிழ்நாடு

11. இந்திய தேசிய காங்கிரசைத் தோற்றுவித்தவர் யார்?
அ) ஏ.ஓ. ஹியூம் ஆ) நேரு
இ) காந்தி ஈ) அன்னிபெசன்ட்

12. தீனபந்து என்று அழைக்கப்பட்டவர் யார்?
அ) எம்.ஜி. ரானடே ஆ) திலகர்
இ) சி.எப். ஆண்ட்ரூஸ் ஈ) சி.ஆர். தாஸ்

13. ஏற்காடு மலை வாழிடம் எந்த மலை மீது உள்ளது?
அ) பச்சை மலை ஆ) ஜவ்வாது மலை
இ) பரங்கி மலை ஈ) சேர்வராயன் மலை

14. இந்தியாவிலேயே அதிக அளவு ரப்பர் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
அ) தமிழ்நாடு ஆ) கர்நாடகா
இ) கேரளா ஈ) அசாம்

15. கும்பமேளா என்ற மதவிழா எங்கு நடைபெறும்
அ) ஹரித்துவார் ஆ) கும்பகோணம்
இ) ராமேஸ்வரம் ஈ) காசி

விடைகள்: 1.(அ), 2.(ஆ), 3.(ஈ), 4(இ), 5.(ஆ), 6.(ஈ), 7.(அ), 8.(ஈ),
.(இ), 10.(ஆ), 11(அ), 12.(இ), 13.(ஈ), 14.(இ), 15.(அ)

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.