இந்திய கப்பல் படையில் பணி

நம் நாட்டின் முக்கிய பாதுகாப்புப் படைகளில் ஒன்றான இந்திய கப்பல் படை அதன் தொழில் நுட்ப காரணங்களுக்காகவும், அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய வீரர்களுக்காகவும் உலக அளவில் பெயர் பெற்று விளங்குகிறது. பெருமைக்குரிய இந்தப் படையில் செய்லர் பிரிவில் காலியாக இருக்கும் ஏறத்தாழ 400 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: விண்ணப்பதாரர்கள் 1.4.2000க்கு பின்னரும், 31.3.2003க்கு முன்னரும் பிறந்தவர் களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் முலம் பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் எப்படி?: இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.14600/- வரை பெறமுடியும்.

தேர்ச்சி எப்படி ?: பிசிக்கல் பிட்னஸ் டெஸ்ட், மருத்துவத் தகுதித் தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும் .

விண்ணப்பக் கட்டணம் : ரூ.205/-ஐ இந்திய கப்பல் படையில் செய்லர் பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 1.8.2019

விபரங்களுக்குhttps://www.joinindiannavy.gov.in/

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.