பொது அறிவு,TNPSC Model Questions- General Knowledge GK, 21-06-2010

1. திராட்சைப் பழத்தில் காணப்படும் அமிலம் எது?
அ) லாக்டிக் அமிலம் ஆ) கந்தக அமிலம்
இ) டார்டாரிக் அமிலம் ஈ) சிட்ரிக் அமிலம்

2. சூரிய மண்டலத்தில் மிகக் குளிரான கிரகம் எது?
அ) நெப்டியூன் ஆ) புளூட்டோ
இ) ஜூபிட்டர் ஈ) வீனஸ்

3. மின் அழுத்த வேறுபாட்டை கண்டுபிடிக்க உதவும் கருவி எது?
அ) கால்வனா மீட்டர் ஆ) அம்மீட்டர்
இ) வோல்ட்மீட்டர் ஈ) மின்மாற்றிகள்

4. அழுகிய முட்டை நாற்றத்தை தருவது எது?
அ) ஹைட்ரஜன் சல்பைடு ஆ) கந்தக அமிலம்
இ) கந்தகம் ஈ) கந்தக டை ஆக்ஸைடு

5. லேசரைக் கண்டுபிடித்தவர் யார்?
அ) ரைஸ்கெல்லாக் ஆ) ஜே.எப்.கான்ட்ரல்
இ) சி.எச்.டவுன்ஸ் ஈ) லாண்ட்ஸ்ராம்

6. கேத்தோடு கதிர்கள் என்பவை
அ) எலக்ட்ரான்கள் ஆ) புரோட்டான்கள்
இ) நியூட்ரான்கள் ஈ) அயனிகள்

7. ஹைட்ரஜன் குண்டில் செயல்படுவது எது?
அ) அணுக்கரு சிதைவு ஆ) அணுக்கரு இணைப்பு
இ) மின் பகுப்பு ஈ) இவை எதுவுமில்லை

8. கீழ்கண்டவற்றில் தோலினால் மட்டும் சுவாசிக்கும் பிராணி
அ) மீன் ஆ) பூரான்
இ) தவளை ஈ) மண்புழு

9. உயிர்முடிச்சு என அழைக்கப்படுவது
அ) தண்டுவடம் ஆ) குரல்வளை
இ) முகுளம் ஈ) உதரவிதானம்

10. பாலில் காணப்படும் டைசாக்கரைடு
அ) லேக்டோஸ் ஆ) மால்டோஸ்
இ) சுக்ரோஸ் ஈ) குளுக்கோஸ்

11. பாறை <உப்பு என அழைக்கப்படுவது
அ) பேரியம் ஆ) சோடியம் குளோரைடு
இ) அமோனியம் ஈ) கால்சியம் குளோரைடு

12. கிரெஸ்கோகிராப் கருவியை கண்டுபிடித்தவர் யார்?
அ) ஜே.சி.போஸ் ஆ) ஐன்ஸ்டீன்
இ) பேர்டு ஈ) சி.வி.ராமன்

13. ஐஸ்கட்டி தயாரிக்க பயன்படுவது
அ) உலர்ந்த ஐஸ் ஆ)ஹைட்ரஜன் வாயு
இ) திரவ அமோனியா ஈ) கார்பன் டை ஆக்சைடு

14. கீழ்கண்டவற்றில் அந்துருண்டை என்பது
அ) நாப்தலீன் ஆ) சைலீன்
இ) குயூமின் ஈ) ஆந்தரசீன்

15. முட்டையின் வெள்ளைப் பகுதியில் உள்ளது எது?
அ) வைட்டமின்கள் ஆ) புரதச் சத்து
இ) தாதுப் பொருட்கள் ஈ) கொழுப்புச் சத்து

விடைகள் : 1.( இ), 2.(ஆ), 3.(இ), 4.(அ), 5.(இ), 6.(அ), 7.(ஆ), 8.(ஈ),
9.(இ), 10.(அ), 11.(ஆ), 12.(அ), 13.(இ), 14.(அ), 15.(ஆ)

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.