TNPSC General Knowledge VAO Sample Question Answers March 2011 (பொது அறிவு)

TNPSC General Knowledge Sample Question Answers March 2011 Part-1

1. பாசிட்ரானைக் கண்டுபிடித்தவர் யார்?
அ) மேடம் கியூரி ஆ) டிராக்
இ) ரூதர் போர்டு ஈ) சாட்விக்

2. தமிழகத்தில் பழங்கால ஓவியம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம்?
அ) கீழ்வளை ஆ) பனைமலை
இ) மல்லப்பாடி ஈ) சித்தன்னவாசல்

3. "இனியவை நாற்பது' நூலின் ஆசிரியர்?
அ) பூதஞ்சேந்தனார் ஆ) கணிமேதாவியார்
இ) நல்லாதனார் ஈ) விளம்பிநாகனார்

4. ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம்?
அ) வேகம் குறைந்த வினை ஆ) உட்கரு பிளத்தல்
இ) உட்கரு வெடித்தல் ஈ) உட்கரு இணைதல்

5. "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று கூறியவர்?
அ) தாயுமானவர் ஆ) திருமூலர்
இ) அண்ணாதுரை ஈ) வள்ளலார்

6. மின்தேக்குத் திறனின் அலகு?
அ) ஓம் ஆ) கூலூம்
இ) கிராம் ஈ) பாரட்

7. நக்கீரர் எழுதிய நூல்?
அ) ஏலாதி ஆ) மதுரைக்காஞ்சி
இ) நெடுநல்வாடை ஈ) முல்லைப்பாட்டு

8. தகவல் அறியும் உரிமை சட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடு?
அ) சுவீடன் ஆ) பிரிட்டன்
இ) அமெரிக்கா ஈ) பிரான்ஸ்

9. பராக் ஒபாமா எந்த மாகாணத்தைச் சேர்ந்தவர்?
அ) லாஸ் ஏஞ்சல்ஸ் ஆ) வாஷிங்டன்
இ) நியூயார்க் ஈ) இலினாய்ஸ்

10. இந்தியாவில் உள்ள ஒரே மனிதக் குரங்கு?
அ) கிப்பன் ஆ) உராங் குட்டான்
இ) கொரில்லா ஈ) ஹைலோபேட்

11. விண்வெளியின் மேல்புறம் உள்ள அடுக்கு?
அ) மீசோஸ்பியர் ஆ) ஸ்ட்ராடோஸ்பியர்
இ) டிராபோஸ்பியர் ஈ) ஐயனோஸ்பியர்

12. மரத்தின் ஆண்டு வளையங்களை எண்ணிப்பார்த்து, வயதை கணக்கிடும் படிப்பு?
அ) எண்டமோலஜி ஆ) டென்டிரோகிரோனாலஜி
இ) டென்டிரோகிராம் ஈ) ஜெரன்டாலஜி

13. "கதிர்மணி விளக்கம்' எனும் நூலை எழுதியவர்?
அ) வெள்ளை வாரணர் ஆ) அவ்வை சு.துரைசாமி
இ) ஏ.கே.செட்டியார் ஈ) பண்டிதமணி கதிரேசன்

14. இரும்பை கால்வனைசிங் செய்ய பயன்படும் உலோகம்?
அ) நிக்கல் ஆ) மாங்கனீசு
இ) சிங்க் ஈ) குரோமியம்

15. புறநானூறில் அதிக பாடல்களை எழுதியவர்?
அ) அவ்வையார் ஆ) கோவூர் கிழார்
இ) பரணர் ஈ) கபிலர்

விடைகள்:
1.(ஆ) 2.(இ) 3.(அ) 4.(ஈ) 5.(ஆ) 6.(ஈ) 7.(இ) 8.(அ) 9.(ஈ) 10.(அ) 11.(ஈ) 12.(ஆ) 13.(ஈ) 14.(இ) 15.(அ)

TNPSC General Knowledge Sample Question Answers March 2011 Part-2

1. இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்?
அ) வசதி வீதம் ஆ) தண்டனை வீதம்
இ) கழிவு வீதம் ஈ) இதில் ஏதுமில்லை

2. பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர்?
அ) மூன்றாம் ராஜேந்திரன் ஆ) மூன்றாம் குலோத்துங்கன்
இ) மூன்றாம் ராஜராஜன் ஈ) வீர ராஜேந்திரன்

3. "மனிதன் ஒரு சமூகப் பிராணி' என்று கூறியவர்?
அ) ஸ்பென்சர் ஆ) அரிஸ்டாடில்
இ) காம்டே ஈ) மெக்ஐவர்

4. அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம்?
அ) ஒடிசா ஆ) ஆந்திரப் பிரதேசம்
இ) கர்நாடகம் ஈ) மகாராஷ்டிரா

5. இந்தியாவில் உள்ள மிக நீளமான இருப்புப்பாதை?
அ) அமிர்தசரஸ் - பூரி ஆ) கவுகாத்தி - திருவனந்தபுரம்
இ) டில்லி - மும்பை ஈ) டில்லி - கோல்கட்டா

6. "இன்சாட் 2 - பி' விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு?
அ) ஏப்ரல் 1975 ஆ) ஜூன் 1979
இ) நவம்பர் 1981 ஈ) ஜூலை 1993

7. திட்ட வெப்ப நிலையில் திரவ நிலையில் உள்ள தனிமங்கள்?
அ) மெக்னீசியம் ஆ) புரோமின்
இ) மெர்க்குரி ஈ) சோடியம்

8. மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
அ) 1950 ஆ) 1963
இ) 1970 ஈ) 1971

9. இயற்கை கவிதை தத்துவ அறிஞர் யார்?
அ) பாரதியார் ஆ) ஸ்ரீ அரவிந்தர்
இ) ரவீந்திர நாத் தாகூர் ஈ) சுப்ரமணிய சிவா

10. தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் எது?
அ) மோக முள் ஆ) பிரதாப முதலியார் சரித்திரம்
இ) கமலாம்பாள் சரித்திரம் ஈ) பத்மாவதி சரித்திரம்

11. தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி?
அ) சடையனார் ஆ) கணநாதர்
இ) திருநீலகண்டர் ஈ) நெடுமாறர்

12. இந்தியாவில் தன்னாட்சி இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
அ) 1915 ஆ) 1916
இ) 1910 ஈ) 1911

13. "டிப்தீரியா' நோய் எதனுடன் தொடர்புடையது?
அ) தொண்டை ஆ) ரத்தம்
இ) நுரையீரல் ஈ) கல்லீரல்

14. உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள்?
அ) மார்ச் 21 ஆ) ஜூன் 5
இ) டிசம்பர் 1 ஈ) டிசம்பர் 2

15. "நேட்டாலிட்டி' எனப்படுவது?
அ) பிறப்பு விகிதம் ஆ) இறப்பு விகிதம்
இ) வாழும் விகிதம் ஈ) இதில் ஏதுமில்லை

விடைகள்:
1.(ஈ) 2.(அ) 3.(ஆ) 4.(ஈ) 5.(ஆ) 6.(ஈ) 7.(இ) 8.(ஈ) 9.(இ) 10.(ஆ)
11.(இ) 12.(ஆ) 13.(அ) 14.(ஆ) 15.(அ)

TNPSC General Knowledge Sample Question Answers March 2011 Part-3

1. புத்த கடிகை செயல்பட்ட இடம்
அ) மாமல்லபுரம் ஆ) காஞ்சிபுரம்
இ) மதுரை ஈ) உறையூர்

2. ரத்தம் உறைய காரணமான பொருள்
அ) ரத்த சிவப்பணு ஆ) ரத்த வெள்ளையணு
இ) ரத்த தட்டுகள் ஈ) ஹெப்பாரின்

3. திருத்தொண்டர்மாக்கதை என்பது
அ) கந்தபுராணம் ஆ) பெரியபுராணம்
இ) விஷ்ணுபுராணம் ஈ) சிவபுராணம்

4. தற்போது ஐப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு(ரிக்டரில்)
அ) 8.9 ஆ) 9
இ) 10 ஈ) 9.8

5. வெப்பநிலையின் அலகு
அ) கெல்வின் ஆ) செல்சியஸ்
இ) பாரன்ஹீட் ஈ) ஜூல்

6. உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுவது
அ) மார்ச் 22 ஆ) மார்ச் 23
இ) மார்ச் 24 ஈ) மார்ச் 25

7. இரண்டு மாநிலங்களின் தலைநகரம்
அ) டில்லி ஆ) சண்டிகர்
இ) மும்பை ஈ) கோல்கட்டா

8. அண்மையில் தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக சச்சின் எத்தனையாவது சதம் அடித்தார்
அ) 99 ஆ) 102
இ) 40 ஈ) 101

9. மகாநதி உற்பத்தியாகும் இடம்
அ) திரியம்பக் ஆ) அமர்கண்டக்
இ) மகாபலேஷ்வர் ஈ) பஸ்தர் குன்றுகள்

10. வங்கதேசம் தனி நாடாக உருவான ஆண்டு
அ) 1970 ஆ) 1971
இ) 1972 ஈ) 1973

11. மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ள மாநிலம்
அ) மிசோரம் ஆ) நாகாலாந்து
இ) அசாம் ஈ) அருணாச்சல பிரதேசம்

12. இந்தியாவின் தென்முனை
அ) கன்னியாகுமரி ஆ) தனுஸ்கோடி
இ) இந்திரா முனை ஈ) கோடியக்கரை

13. நிறை எண் என்பது எதன் எண்ணிக்கை
அ) புரோட்டான் ஆ) எலக்ட்ரான்
இ) புரோட்டான் அல்லது எலக்ட்ரான் ஈ) புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்

14. சிவப்பும் பச்சையும் சேர்ந்தால் கிடைக்கும் நிறம்
அ) கருப்பு ஆ) நீலம்
இ) மஞ்சள் ஈ) வெள்ளை

15. ஸ்பெக்ட்ரம் விசாரணை மேற்கொள்ளும் பார்லிமென்ட் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை
அ) 24 ஆ) 26 இ) 28 ஈ) 30

விடைகள்: 1(ஆ), 2(ஈ), 3(ஆ), 4(அ), 5(அ), 6(அ), 7(ஆ), 8(இ), 9(ஆ), 10(ஆ), 11(ஈ), 12(இ), 13(ஈ), 14(இ), 15(ஈ)

TNPSC General Knowledge Sample Question Answers March 2011 Part-4

1. உலககோப்பையில் போட்டியை நடத்தும் நாடுகளில் காலிறுதிக்கு தகுதிபெறாத அணி
அ) வங்கதேசம் ஆ) இலங்கை
இ) இந்தியா ஈ) பாகிஸ்தான்

2. இந்தியாவின் தேசிய விலங்கு எது?
அ) சிங்கம் ஆ) புலி
இ) யானை ஈ) மான்

3. உலகச் சுகாதார நாள் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?
அ) டிசம்பர் 1 ஆ) ஏப்ரல் 7
இ) ஜனவரி 14 ஈ) மார்ச் 13

4. தமிழக சட்டசபை தேர்தல், மொத்தம் எத்தனை தொகுதிகளுக்கு நடைபெறுகிறது
அ) 235 ஆ) 39
இ) 234 ஈ) 40

5. உடலின் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டால், மஞ்சள் காமாலை நோய் வரும்?
அ) கண் ஆ) இரைப்பை
இ) சிறுநீரகம் ஈ) கல்லீரல்

6. நில நடுக்கத்தினைப் பதிவு செய்ய பயன்படும் கருவி எது?
அ) எர்த் மானிட்டர் ஆ) எர்த் கிராப்
இ) சீஸ்மோ கிராப் ஈ) ட்ரெமர் மானி

7. ஜகார்த்தா எந்த நாட்டின் தலைநகரம்?
அ) மியான்மர் ஆ) இந்தோனேஷியா
இ) தைவான் ஈ) தென் கொரியா

8. இந்தியாவில் டாக்டர் (மருத்துவர்) பட்டம் பெற்ற முதல் பெண் யார்?
அ) சரோஜினி நாயுடு ஆ) லட்சுமி
இ) முத்துலட்சுமி ரெட்டி ஈ) ஜெகதீஸ்வரி

9. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பாலைவனம்
அ) தார் ஆ) கைபர்
இ) சஹாரா ஈ) வளைகுடா

10. ஆசிய ஜோதி என்று அழைக்கப்பட்டவர் யார்?
அ) காந்தி அடிகள் ஆ) லால் பகதூர் சாஸ்திரி
இ) ஜவகர்லால் நேரு ஈ) ராஜேந்திர பிரசாத்

11. தங்கத்தின் வேதியியல் பெயர் என்ன?
அ) பிளாட்டினம் ஆ) அவுரம்
இ) அர்ஜென்டினியம் ஈ) காப்பர்

12. லூயிஸ் பிரெயில் கீழ்க்காணும் எதனைக் கண்டுபிடித்தார்?
அ) புகைப்படம் ஆ) பார்வை அற்றவர்களுக்கான அச்சடித்து படிக்கும் முறை
இ) கண்ணாடி ஈ) நெசவு இயந்திரம்

13. ஜப்பானில் பாதிப்புக்குள்ளான அணு உலை எந்த நகரில் உள்ளது
அ) புகுஷிமா ஆ) ஷாங்காய்
இ) ஹவாய் ஈ) மிர்பூர்

14. ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு எது?
அ) கால்பந்து ஆ) பீச் வாலிபால்
இ) கிரிக்கெட் ஈ) பேட்மின்டன்

15. பூடான் தலைநகர் எது?
அ) கேங்டாக் ஆ) திம்பு
இ) ஈட்டா நகர் ஈ) பாட்னா

விடைகள்: 1(அ), 2(ஆ), 3(ஆ), 4(இ), 5(ஈ), 6(இ), 7(ஆ), 8(இ), 9(அ), 10(இ) 11(ஆ), 12(ஆ), 13(அ), 14(இ), 15(ஆ)

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.