TNPSC-VAO-GROUP-IV-GOVT-EXAM-Question Answers 04-04-2017 (டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை)

133. வேதங்கள் பற்றிய பின்வரும் வாக்கியங்களை ஆராய்ந்து தெரிவு செய்யவும்:1)வேதங்கள், சம்கீதா, ஆரிண்யங்கா, உபநிடதம் மற்றும் பிராமணங்கள் கொண்டது
2)வேதங்கள், சம்கீதா, பிராமணங்கள், ஆரிண்யங்கா மற்றும் உபநிடதங்கள் கொண்டது
3)வேதங்கள், பிராமணங்கள், சம்கீதா, உபநிஷத் மற்றும் ஆரிண்யங்கா கொண்டது
4)வேதங்கள், ஆரிண்யங்கா, பிராமணங்கள், உபநிஷத் மற்றும் சம்கீதா கொண்டது
அ)4 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ)1 மட்டும் சரி ஈ) 3 மட்டும் சரி

134.சாண்டில்ய வித்யா என்ற பிரிவு உள்ள உபநிடதம்
அ) கதா உபநிடதம் ஆ) பிரஸ்ண உபநிடதம்
இ) சாந்தோக்கிய உபநிடதம் ஈ) அய்த்தரேய உபநிடதம்

135.கீழ்வரும் வரிகளை கவனித்து விடை தருக
1)ரிக்வேதத்தில் சிவன் ருத்திமாக காட்சியளிக்கிறார்
2)ரிக்வேதத்தில் விஷ்ணு உதாரண குணமுள்ளவராகவும், சூரியக்கடவுளாகவும், மாவீர கடவுளாகிய இந்திரனுடன் இணைக்கப்படுகிறார். இதில் எது சரி?
அ) 1-மட்டும் சரி ஆ) 2- மட்டும் சரி
இ) 1- மற்றும் 2-ம் சரி ஈ) 1 மற்றும் 2 தவறு

136. கீழ்கண்டவற்றில் சரியானவற்றைப் பொருத்துக
அ) அன்னமயகோசம் 1) உணர்வுக்கவசம்
ஆ) பிராணமயகோசம் 2) இன்பக்கவசம்
இ) விஞ்ஞானமயகோசம் 3) வாயுக்கவசம்
ஈ) ஆனந்தமயகோசம் 4) உடல்கவசம்
குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 3 2 1 4
ஆ) 2 1 3 4
இ) 3 4 1 2
ஈ) 1 4 3 2

137. இரமணத்தேவர் வாழ்ந்த இடம்
அ) திருவண்ணாமலை ஆ) அழகர் மலை
இ) பழநி மலை ஈ) எதுவும் இல்லை

138. 'சம்ஹிதா' குறிப்பிடுவது
அ) வேதத்தில் உள்ள பாசுரங்களின் தொகுப்பு
ஆ) பிராமணாஸ்
இ) வேதங்களின் நிறைவு பகுதி
ஈ) வேதத்தில் உள்ள முதற்படிவம்

139. வேத இலக்கியம் இப்படி பிரிக்கப்பட்டுள்ளது
அ) வேதா மற்றும் வேதாங்கா ஆ) அறிவு மற்றும் ஸ்ருதி
இ) பிரம்மன் மற்றும் கடவுள் ஈ) இதில் எதுவும் இல்லை

140. தாயுமானவரைப் பாராட்டிய இரட்டையர்
அ) வள்ளலாரும் மறைமலையடிகளும்
ஆ) பட்டினத்தாரும் வள்ளலாரும்
இ) பட்டினத்தாரும் அருணகிரிநாதரும்
ஈ) அருணகிரிநாதரும் மறைமலையடிகளும்

141. நாச்சியார் திருமொழியை எழுதியவர்
அ) திருமங்கை ஆழ்வார் ஆ) ஆண்டாள்
இ) பொய்கை ஆழ்வார் ஈ) இவர்களில் யாருமில்லை

142. சிவஞானபோதத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர்:
அ) ஹாய்சிங்டன், பையட் பாதிரியார், நல்லசாமிப் பிள்ளை, டேவிட் நவமணி மற்றும் சிவபாதசுந்தரம்
ஆ) பையட் பாதிரியார், போப் பாதிரியார், ஹாய்சிங்டன், நல்லசாமிப் பிள்ளை மற்றும் டேவிட் நவமணி
இ) ஹாய்சிங்டன், டேவிட் நவமணி, சிவபாதசுந்தரம், பையட் பாதிரியார் மற்றும் தாமஸ் பாதிரியார்
ஈ) டேவிட் நவமணி, போப் பாதிரியார், ஹாய்சிங்டன், சிவபாதசுந்தரம் மற்றும் பையட் பாதிரியார்

143. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது பிரதிட்டை கிரியையின் சரியான தொடர்
அ) குடமுழுக்கு - அட்டபந்தனம் - ஸ்பர்சாகுதி
ஆ) அனுஞ்சை - கணபதி பூஜை - வாஸ்து சாந்தி
இ) பிம்பசுத்தி - யாகசாலை - கலாகர்ஷணம்
ஈ) கும்பத்தாபனம் - காப்பு கட்டு - முளையீடு

விடைகள்: 133.ஆ 134.இ 135.இ 136.இ 137.ஆ 138.அ 139.அ 140.இ

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.