TNPSC-VAO-GROUP-IV-GOVT-EXAM-Question Answers 21-03-2017 (டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை)

111. கீதையின் கூற்றுப்படி உள்ளச் சமநிலை என்பது: 1. அறப்பண்பு 2. நேர் மனப்பான்மை
3. கருத்தின்மை 4. உணர்வுகளுக்குட்பட்ட பற்று
கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
அ)1-மட்டும் சரி ஆ)1,2 சரி இ)3,4 சரி ஈ) அனைத்தும் சரி

112. யமுனாச்சாரியாரின் வேறு பெயர்:
அ) ராமானுஜர் ஆ) ஆளவந்தார் இ) நாதமுனி ஈ) பெரிய நம்பி

113. பொருத்துக
அ) சங்கு (1) புற வழிபாடு
ஆ) சக்கரம் (2) எண்ணத்தை வெளிப்படுத்தல்
இ) பாஹ்ய ஆராதனா (3) பஞ்ச ஜயை
ஈ) சங்கல்பம் (4) சுதர்சனம்

குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 3 4 1 2
ஆ) 3 1 4 2
இ) 3 2 4 1
ஈ) 2 4 1 3

114. சிவஞான முனிகள் சிவஞானபோதத்திற்கு எழுதிய உரையின் பெயர்:
அ) சிவஞான சித்தியார் ஆ)சிவஞான மாபாடியம்
இ) உண்மை விளக்கம் ஈ) மேலே உள்ள எல்லாம்

115. சைவம் ஏற்றுக்கொள்ளும் 'பொருள்கள்' என்ற தலைப்பில் கீழ்கண்டவற்றில் பொருந்தா ஒன்று
அ) பதி ஆ) ஆணவம் இ) கன்மம் ஈ) துரியா

116. சிரவணபௌகோளாவில் உள்ள 59 அடி உயர கோமட்டீஸ்வரர் சிலைஎந்த சமயக்கலைக்கு சிறப்பு ஊட்டுபவை :
அ) பௌத்தம் ஆ) வீர சைவம் இ) சாருவாக்கம் ஈ) சமணம்

117. எல்லா உலகங்களும் ஒரே காலத்தில் அழியும் என ஆன்றோர் கூறுவர். இது
அ) அநிர்வசனியம் ஆ) மகாசங்காரம் இ)சர்வநாசம் ஈ) சூரசங்காரம்

118. நம்பிள்ளை, நஞ்சியர், வியாக்கியானச் சக்கரவர்த்தி எனப் புகழ் பெற்றவர்
அ) பிள்ளை லோகாசாரியார் ஆ)நம்பூதிப்பிள்ளை
இ) பெரியவாச்சான் பிள்ளை ஈ) ஆவுடைப்பிள்ளை

119. கீழ்கண்ட குழுவில் சேராத ஒன்று
அ) அஷ்டபந்தனம் ஆ) குடமுழுக்கு
இ) மகாபிஷேகம் ஈ) நித்திய பூஜை

120. நாதமுனியின் பேரனின் பெயர்:
அ) ஈஸ்வர முனி ஆ) ராம மிஸ்ரா இ)புன்டரிக்க்ஷா ஈ) யமுனா

121. வைணவர்கள், சைவர்கள் மற்றும் சாக்தர்கள் இவர்களுடைய வெவ்வேறு புனித இலக்கியத்தின் பெயர்
அ) ஆகமம் ஆ) சம்ஹிதா இ) தந்திரம் ஈ) வேதம்

122. 'பிரபஞ்சம்' என்பது:
அ)இயற்கை முழுவதையும் குறிக்கிறது ஆ)இயற்கை நீங்கலாக குறிக்கிறது
இ) இரண்டையும் ஈ) எதுவுமில்லை

விடைகள்: 111) அ 112)ஆ 113) அ 114) ஆ 115) ஈ 116) ஈ 117) ஆ 118)இ 119) ஈ 120) ஈ 121) அ 122) அ

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.