TNPSC-VAO-GROUP-IV-GOVT-EXAM-Question Answers 31-01-2017 (டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை)

33. கோயில் திருப்பல்லாண்டு பாடலைப் பாடியவர்
அ) சேந்தனார் ஆ) திருமாளிகைத் தேவர்
இ) சேதிராயர் ஈ) புருடோத்தம நம்பி

34. 'வசந்த நவராத்திரி' விழா எதன் பொருட்டு கொண்டாடப்படுகிறது
அ) ஆண் தெய்வம் நினைவாக ஆ) பெண் தெய்வம் நினைவாக
இ) வசந்த காலத்தை குறித்து ஈ) அர்த்த நாரீஸ்வரரை நினைவிற் கொண்டு

35.எந்த முனிவரின் நினைவாகக் 'குரு பூர்ணிமா' கொண்டாடப்படுகிறது?
அ) வேத வியாசர் ஆ) அகத்திய முனிவர்
இ) சனகர் ஈ) யக்ஞவல்கியர்

36. அர்த்த பஞ்சகம் என்பது
1. அடையத்தக்க பிரம்ம ஸ்வரூபம், அடைகிறவனானபிரத்யாத்மா ஸ்வரூபம், அடைய உதவும் வழிமுறைஅடைவதால் உண்டாகும் நலம், அடைவதற்கு தடையானவிலக்கப்பட வேண்டியவை
2. பிரத்யகாத்மா ஸ்வருபம், அடைய வேண்டிய பொருள்,சத்யமானது, பெருமை உடையது, இறைவனை அடைவது இவற்றில் எந்த கூற்று சரியானது
அ) 1-மட்டும் சரி ஆ) 2-மட்டும்; சரி
இ) 1-ம் 2-ம் சரி ஈ) இவற்றில் எதுவுமில்லை

37. பின்வருவனவற்றுள் வேதம் எதைச் சார்ந்த நுால்?
அ) இலக்கணம் ஆ) அறிவு இ) இலக்கியம் ஈ) நீதி

38. ராமானுஜர் கூறும் பேதங்களின் எண்ணிக்கை
அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5

39. பிரம்ம சூத்திரத்திற்கு ராமானுஜர் எழுதிய உரை இவ்வாறு அழைக்கப்படும்
அ) மாண்டூக்ய காரிகை ஆ) ஸ்ரீ பாஷ்யம்
இ) சர்வதரிசனங்கிரகம் ஈ) யோக சூத்திரம்

40. பிரம்மம் மட்டுமே உண்மை என்றும் உலகம் ஒரு மாயத் தோற்றம் என்று கூறியவர்
அ) வல்லவபர் ஆ) ராமானுஜர் இ) மாத்வர் ஈ) சங்கரர்

41. சங்கரரது தத்துவம் இவ்வாறு அழைக்கப்படும்
அ) துவைதம் ஆ) த்வைதம்
இ) விசிட்டாத்வைதம் ஈ) சைவ சித்தாந்தம்

42. வைகாசி விசாக நாள் எந்த கடவுளின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது
அ) விநாயகர் ஆ) நடராஜர் இ) முருகன் ஈ) விஷ்ணு

43. வெள்ளை நிற வடிவினள்
அ) இலட்சுமி ஆ) பார்வதி இ) கலைமகள் ஈ) காளி

44. சஷ்டி நோன்பு முறையில் குரோதத்தை விழாத் தத்துவமாக காட்டுபவர்
அ) சிங்கமுகன் ஆ) முருகன் இ) கஜமுகி ஈ) தாரகன்

45. வடகத்திய வடிவமைப்பும் தெற்கத்திய வடிவமைப்பும் கலந்த கட்டிடக் கலை வடிவமைப்பின் பெயர்
அ) நகரம் ஆ) வேசரம் இ) திராவிடம் ஈ) பாசரம்

46. வேதங்களை ஓதிய முறை
1. ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டது
2. குரு சீடமுறையில் ஒருவர் சொல்ல மற்றவர் கேட்டு மனனம் செய்யப்பட்டு வாய்மொழியில் வந்தது
இவற்றில் எது சரி
அ) 1-மட்டும் சரி ஆ) 2-மட்டும்; சரி இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு

விடைகள்: 33.அ 34.ஆ 35.அ 36.அ 37.ஆ 38.ஆ 39.ஆ
40.ஈ 41.ஆ 42. இ 43.இ 44.அ 45.ஆ 46.ஆ

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.