TNPSC-முக்கியமாக கொள்குறி வினா விடை நூல்களை படிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்

TNPSC– தமிழக வரலாறு
மாணவர்கள் முடிந்தவரையில் தரமான பாடநூல்களையே (Text books) படிக்கவும். Guide,notes என ஆரம்பத்திலேயே சுருங்கி விட வேண்டாம். முக்கியமாக கொள்குறி வினா விடை நூல்களை படிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். பயிற்சி செய்து பார்க்க மட்டுமே material ஆக பயன்படுத்த வேண்டும் . அதுவும் இது போன்ற தேர்வு இல்லாத நேரங்களில் தரமான புத்தங்களை ஆழ்ந்து உள்வாங்கி படிக்கவும்.
TNPSC –யை பொறுத்தவரையில் தமிழ்நாடு - வரலாறு, புவியியல், அரசியல், பொருளாதாரம், சமுதாய பண்பாடு சார்ந்த நிகழவுகள் மற்றும் திராவிட இயக்கம்,சுயமரியாதை இயக்கம் சார்ந்த பகுதிகளில் இருந்து முதனிலை (Preilms) மற்றும் முதன்மை (main) தேர்வுகளில் அதிக கேள்வி கேட்க படுகிறது. அதுமட்டுமின்றி நமது மொழி, இடம் சார்ந்த வரலாறு என்பதால் கண்டிப்பாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும் தான்...
தமிழ்நாடு வரலாறு குறித்து சமீபத்தில் சில புத்தகங்கள் படித்தேன் அருமையாக இருந்தது. தகவல் பெட்டகமாய் உள்ளது...

1. முற்கால தமிழ்நாட்டு வரலாறு (கி.பி 1600 வரை) - க.வெங்கடேசன்
2. தற்கால தமிழ்நாட்டு வரலாறு (கி.பி 1600 - 2012) - க.வெங்கடேசன்

இந்த இரு புத்தகங்களிலும் நிகழ்வுகள் கோர்வையாக, சங்ககால மன்னர்கள், ஆட்சி நிர்வாகம், படையெடுப்புகள், சமுதாய பழக்க வழக்கங்கள்,ஆங்கிலேயே ஆட்சியாளர்கள், கொள்கை முடிவுகள், ஆங்கில ஆட்சியில் சென்னை மகாண சட்டமன்றம், சுயமரியாதை இயக்கம், நீதி கட்சி, சுதந்திரத்திற்கு பிறகு திராவிட இயக்கம்,அரசியல் கட்சிகள் வளர்ந்த விதம், ஆட்சியமைத்த நிகழ்வு என புள்ளி விவரங்களோடு சொல்லப்பட்டுள்ள தரமான புத்தகம் ஆகும்.

3&4 தமிழக வரலாறு – பகுதி 1& 2 - ஆர்.முத்துகுமார், கிழக்கு பதிப்பகம்

எளிய நடையில், விறு விறுப்பாய் தமிழக வரலாற்றை சுவையோடு சொல்லியுள்ளார். அதுவும் சம கால தமிழக வரலாறு எளிதாக புரிந்துகொள்ளும் வகையில், மனதில் பதியும் வகையில் விளக்கபட்டுள்ளது. மாணவர்கள் படிக்கலாம்,அரசியல் வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் எளிதாகபுரிந்து கொள்ளும்விதமாய் உள்ளதால் கட்டுரை வடிவில் எழுத மிகவும் உதவிகரமாய் இருக்கும்.

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு கண்டிப்பாக, கவனமாக படிக்க வேண்டும். இலக்கிய வரலாறு என்பது தமிழ் சார்ந்த 100 வினாக்களில் மட்டுமின்றி, பொது அறிவு பகுதியிலும் அதிகளவில் கேட்கபடுகிறது.
உதாரணத்துக்கு...

1. வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் எது?
2. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
3. 99 மலர்கள் குறித்து குறிப்பிட்டுள்ள நூல் எது?
என்பது போன்ற வினாக்கள் ஆகும்.

தமிழ் இலக்கிய வரலாறு குறித்து மு.வ, மது.ச.விமலானந்தம், அடைக்கலராஜ், பாக்கியமேரி, இன்னும் பல நூல்களை படித்திருக்கிறேன். ஆயினும் போட்டித் தேர்வுக்கும் சரி, படிப்பதற்கு எளிதாக, பயனுள்ளதாக, தகவல் செறிந்துள்ளதாக இருப்பது,

1. ‘ புதிய நோக்கில் தமிழ் இலக்கியவரலாறு - தமிழண்ணல்”

எழுதியுள்ள புத்தகம் தான். தமிழ் இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள் ,பல மொழிகளிலும், எல்லா திசைகளையும் சென்றடைய வேண்டும் என்ற ஆதங்கம் உடையவர். நல்ல தரமான நூலாகும். படித்து பயன்பெறவும். அதேபோல்,

2. ‘தமிழ் இலக்கிய வரலாறு - சிற்பி பாலசுப்ரமணியன்”

எழுதி கவிதா பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள புத்தகமும் சிறப்பாக உள்ளது.
3. ‘தமிழ் இலக்கிய கலை களஞ்சியம் - தேவி ராஜேந்திரன்”

திரு. தேவிரா போட்டித் தேர்வு - தமிழ் இலக்கிய பாடத்திற்கு வகுப்பு எடுப்பவர் என்பதால், போட்டித் தேர்வு சார்ந்து எழுதப்பட்டுள்ள நல்ல நூலாகும்.

தமிழ் சமுதாய பண்பாட்டு வரலாறு

1.தமிழர் நாகரிகமும்,பண்பாடும் - அ. தட்சணமூர்த்தி
2.தமிழக வரலாறும் பண்பாடும் - வே.தி.செல்வம்
3.தமிழக சமூக பண்பாட்டு வரலாறு - தங்கவேல்
தமிழர்களின் பழக்க வழக்கங்கள், சமய நம்பிக்கைகள், வழிபாடுகள், நாகரீக வளர்ச்சி,கருவிகள் பயன்பாடு, ஆடை பயன்பாடு, போர்திறன், திருமண சடங்கு போன்ற வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகளை இந்த நூல்களில் படித்தறியலாம்
.
‘தமிழ் இலக்கணம்” (Group1&2)
பாடத்திட்டம், மீண்டும் தமிழுக்கு,தமிழ் இலக்கணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக வரலாம். அது போன்ற நிலையில் மாணவர்கள்

‘நற்றமிழ் இலக்கணம் - சொ. பரமசிவம்

இந்த புத்தகம் இலக்கணம் குறித்து முழுமையாக எழுதப்பட்டுள்ளது. ளிமையாக புரிந்து கொள்ளும் விதமாக, போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனளிக்கும் விதமாக உள்ளது சிறப்பம்சம் ஆகும்.
மாணவர்கள் புத்தங்கள் வாங்க, மெட்டீரியல் சேகரிக்க, குறிப்புகள் நகல் எடுக்க, படிப்பு சார்ந்த செலவிற்கு ,செலவு செய்ய தயங்கவே தயங்காதீர்கள்.
TNPSC போட்டித் தேர்வை பொறுத்தவரையில் அதிகபட்சம் ரூ. 5000 ல் அனைத்து புத்தகமும் வாங்கி விடலாம். ஆனால் நீங்கள் Group 4 ல் வெற்றி பெற்றுவிட்டாலே மாதம் ரூ. 14000 சம்பளம் பெறமுடியும். ஆதலால் வாழ்க்கைக்கு அடித்தளம் இடக்கூடிய,கௌரவத்தை,அங்கீகாரத்தை தரக்கூடிய, நமது தன்னம்பிக்கையை மீட்டெடுக்ககூடிய இந்த போட்டி தேர்வுகளுக்கு புத்தகம் வாங்குவது என்பதை மிகப்பெரிய மூலதனமாக கருதவும். ஓசி புத்தகம்,அடுத்தவர் எடுத்த குறிப்பு, பிறர் எழுதி வைத்த நோட்ஸ் என்பதை போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.

என்ன விலை கொடுத்தாலும் சொந்தமாக புத்தகம் வாங்குங்கள், ஏனெனில் உங்கள் விருப்பம்போல் குறித்து வைக்கமுடியும்,அடிக்கோடு இடலாம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் படிக்க முடியும். சொந்த குறிப்பு தயார் செய்யுங்கள்அப்பொழுது தான் உங்களுக்கு மனப்பாடம் ஆகும். பாடம் சார்ந்த தெளிவு கிடைக்கும்.
என்னிடமே நிறையபேர், நண்பர்கள், ஜீனியர்கள் என பலர் உங்கள் நோட்ஸ் உள்ளதா? நோட்ஸ் கொடுங்கள் நகல் எடுத்துவிட்டு தருகிறோம் என பலமுறை கேட்டதுண்டு, உண்மை என்னவெனில் நான் எடுத்த குறிப்புகளை படித்து பார்த்து, இன்னும் நிறைய தகவல் கொடுக்க வேண்டும் என பலமுறை நானே கிழித்து போட்டுள்ளேன். ஆதலால் பாடத்திட்டத்தை (syllabus) வரிக்குவரி படியுங்கள். அது சார்ந்த புத்தகத்தை வாங்குங்கள். நீண்ட நேரம் ஆர்வமாக படியுங்கள், மகத்தான வாழ்க்கை அமைய போகிறது என்பதை எண்ணி படியுங்கள். உங்களுக்கு புரியும் விதமாக குறிப்பு எடுத்து கொள்ளுங்கள், மீண்டும் மீண்டும் படித்து பாருங்கள், கட்டுரை வடிவில் எழுத தெளிவு கிடைத்து விடும்.
தமிழ் இலக்கியங்களில், இயற்கை அழகு, காதல், வீரம்,கற்பனை மட்டுமின்றி நம்மை நாமே ஊக்குவித்து கொள்ளகூடிய எழுச்சி பெறச் செய்யக்கூடிய, சுயமுன்னேற்ற பாடல்கள் நிறைய உள்ளன.
தோல்விகளிலிருந்து என்னை மீண்டு எழச் செய்தது குமரகுருபரின் இந்த தேவ வரிகள் தான்...

மெய்வருத்தம் பாரார், பசி நோக்கார், கண்துஞ்சார்,
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் -செவ்வி
அருமையும் பாரார் , அவமதிப்பும் கொள்ளார்,
கருமமே கண்ணாயினார் …….

மீண்டும் மீண்டும் படித்து பாருங்கள்..
யுத்தத்தில் வெற்றி கொள்ளும் உத்தியை பெற்று விடுவீர்கள்.. வாழ்த்துக்கள்!
ஆம்! நம்மால் முடியும்…

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.