TNPSC General Knowledge Sample Question Answers November 2010

TNPSC General Knowledge Sample Question Answers Part-1

1. போடோ - சாந்தால் இனக்கலவரம் நடந்த மாநிலம் எது?
அ) அசாம்        ஆ) திரிபுரா
இ) மணிப்பூர்        ஈ) நாகாலாந்து

2. பாஸ்பரஸ் உள்ள உணவுப்பொருள் எது?
அ) மாமிசம்        ஆ) மாம்பழம்
இ) வெங்காயம்        ஈ) முட்டை மஞ்சள்

3. புரோட்டின் குறைவாக உள்ள உணவுப்பொருள் எது?
அ) சோயா மொச்சை    ஆ) நிலக்கடலை
இ) உளுந்து        ஈ) கோதுமை

4. சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் எது?
அ) பூமி        ஆ) செவ்வாய்
இ) வியாழன்        ஈ) சனி

5. ஓசோன் படலம் பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?
அ) 10 - 20 கி.மீ        ஆ) 40 - 50 கி.மீ
இ) 70 - 80 கி.மீ        ஈ) 110 - 120 கி.மீ

6. மிக அதிக வெப்பமுள்ள கிரகம் எது?
அ) செவ்வாய்        ஆ) புதன்
இ) பூமி        ஈ) வீனஸ்

7. ஜெட் இன்ஜினைக் கண்டுபிடித்தவர் யார்?
அ) ரைட் சகோதரர்கள்    ஆ) ஜேம்ஸ் வாட்
இ) சார்லஸ் பார்சன்ஸ    ஈ) பிராங்க் விட்டில்

8. நிலையான கூட்டணி ஆட்சி உள்ள நாடு எது?
அ) ஜெர்மனி         ஆ) பிரிட்டன்
இ) பிரான்ஸ்        ஈ) போர்ச்சுக்கல்

9. முதல் புத்த மதக் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
அ) பாடலிபுத்திரம்    ஆ) வைசாலி
இ) ராஜக்கிருகம்        ஈ) காஷ்மீர்

10. அலிகார் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
அ) மிர்ஜா குலாம் அகமது    ஆ) முகமது அலி ஜின்னா
இ) சையது அகமது கான்    ஈ) அபுல் கலாம் ஆசாத்

11. மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாள் எது?
அ) ஜனவரி 30, 1948    ஆ) நவம்பர் 1, 1948
இ) ஏப்ரல் 30, 1949    ஈ) ஜனவரி 26, 1950

12. ரகுவம்சம் என்ற நூலை எழுதியவர் யார்?
அ) தந்தின்        ஆ) அஸ்வகோஷா
இ) காளிதாசர்        ஈ) சூத்ரகா

13. "இந்திய நெப்போலியன்' என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) சந்திர குப்த மௌரியர்    ஆ) போரஸ்
இ) சமுத்திர குப்தர்    ஈ) இரண்டாம் சந்திர குப்தர்

14. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
அ) வேவல் பிரபு        ஆ) மவுண்ட்பேட்டன்
இ) ராஜகோபாலாச்சாரியார்    ஈ) ராஜேந்திர பிரசாத்

15. "நரிமணம்' எண்ணெய் வயல் எங்குள்ளது?
அ) காவிரி ஆற்றுப்படுகை    ஆ) கிருஷ்ணா நதிப்படுகை
இ) வைகை நதிப்படுகை    ஈ) கோதாவரி நதிப்படுகை

விடைகள்:
1 (அ) 2 (இ) 3 (ஈ) 4 (இ) 5 (ஆ) 6 (ஈ) 7 (ஈ) 8 (அ)    9 (இ) 10 (இ) 11(அ)
12 (இ) 13 (இ) 14 (இ) 15 (அ)

TNPSC General Knowledge Sample Question Answers Part-2

1. வன விலங்கு நாள் என்று கொண்டாடப்படுகிறது?
அ) ஜூன் 5        ஆ) ஜூலை 15
இ) ஆகஸ்ட் 21        ஈ) அக்டோபர் 5

2. ஹிராகுட் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
அ) நர்மதை        ஆ) கிருஷ்ணா
இ) சட்லெஜ்        ஈ) மகாநதி

3. அகல ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள தூரம் எவ்வளவு?
அ) 2 மீட்டர்        ஆ) 1.88 மீட்டர்
இ) 1.60 மீட்டர்        ஈ) 1.67 மீட்டர்

4. இந்தியாவில் அதிகம் பால் கொடுக்கும் ஆடு ரகம் எது?
அ) பார்பாரி        ஆ) ஜம்னாபாரி
இ) பிளாக் பெங்கால்    ஈ) பீடால்

5. தில்வாரா கோயில் எங்கு அமைந்துள்ளது?
அ) வங்கதேசம்        ஆ) புதுச்சேரி
இ) சீனா        ஈ) ராஜஸ்தான்

6. ஆயிரம் ஏரிகளை கொண்ட நாடு எது?
அ) தாய்லாந்து        ஆ) சுவிட்சர்லாந்து
இ) ஸ்காட்லாந்து        ஈ) பின்லாந்து

7. இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட ஆண்டு?
அ) 1885        ஆ) 1906
இ) 1924        ஈ) 1926

8. குடியரசு தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது யார்?
அ) துணைக் குடியரசுத் தலைவர்    ஆ) பிரதமர்
இ) இந்திய தலைமை நீதிபதி    ஈ) மக்களவை சபாநாயகர்

9. சங்க இலக்கியங்களில் பொருநை என அழைக்கப்பட்ட நதி?
அ) காவிரி        ஆ) தாமிரபரணி
இ) வைகை        ஈ) கோதாவரி

10. இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் எது?
அ) கோல்கட்டா        ஆ) டில்லி
இ) சென்னை        ஈ) மும்பை

11. ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு?
அ) 1935        ஆ) 1949
இ) 1969        ஈ) 1979

12. குரோமோசோம்கள் மிகத் தெளிவாகத் தெரியும் நிலைக்குப் பெயர்?
அ) அனாபேஸ்        ஆ) டீலோபேஸ்
இ) புரோபேஸ்        ஈ) மெட்டாபேஸ்

13. அமில மழைக்கு காரணமாக அமையும் வாயு எது?
அ) கார்பன் டை ஆக்ஸைடு    ஆ) கார்பன் மோனாக்ஸைடு
இ) சல்பர் டை ஆக்ஸைடு    ஈ) இதில் ஏதுமில்லை

14. நியூட்ரான்களற்ற தனிமம் எது?
அ) ஹைட்ரஜன்        ஆ) லித்தியம்
இ) ஹீலியம்        ஈ) பெரில்லியம்

15. அயனிப் பிணைப்புக்கான எடுத்துக்காட்டு?
அ) போரான்        ஆ) வைரம்
இ) கார்பன்        ஈ) சோடியம் குளோரைடு

விடைகள்:
1 (ஈ) 2 (ஈ)  3 (ஈ)  4 (அ)   5 (ஈ)  6 (ஈ)  7 (அ)  8 (இ)  9 (ஆ)  10 (அ)  11 (ஆ)
12 (இ)  13 (இ)  14 (அ)  15 (ஈ)

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.