TNPSC-General Knowledge Preparation October 2016-Part 3 (நாட்டு நடப்பு பொது அறிவு ...)

General Knowledge Question is prepared from daily News Papers for TNPSC and VAO Exams


இந்திய மகளிரின் திருவிழா என்ற பெயரில் நடத்தப்படும் பெண்களுக்கான நிகழ்வு எங்கு நடக்கிறது?
புதுடில்லி. இது இந்திய பெண்கள் தயாரித்துள்ள ஆர்கானிக் பொருட்களுக்கான திருவிழா. அக்., 14 முதல் 23 வரை நடக்கிறது.

உலக தர நாள் என்று கொண்டாடப்படுகிறது? 
அக்டோபர் 14

ஜி.மகாலிங்கம் சமீபத்தில் எதனால் செய்திகளில் இடம் பெற்றார்? 
செபி அமைப்பின் முழு நேர உறுப்பினராக இவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். 

பேரிடர் அபாய குறைப்புக்கான ஐ.நா.,வின் தலைமையகம் எங்குள்ளது? 
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா

அதிவேக ரயில் தயாரிப்பில் எந்த நாட்டுடன் இந்தியா சமீபத்தில் இணைந்துள்ளது? 
ஜெர்மனி

நோபல் இலக்கிய பரிசை சமீபத்தில் அமெரிக்காவின் புகழ் பெற்ற பாடகர் பாப் டிலான் வென்றார். இந்த பரிசு தொகை எவ்வளவு? 
6 கோடி ரூபாய் 

வெகு வேகமாக அவுட்டோர் மைதானத்தில் இருந்து இன்டோர் மைதானமாக மாற்றக் கூடிய மைதானம் இந்தியாவில் எங்கு சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது? 
ஆமதாபாத்

முதல் முதலில் உலக சுனாமி விழிப்புணர்வு தினம் என்று கடைப்பிடிக்கப்பட உள்ளது? 
2016 நவம்பர் 5

தொலை தூர மற்றும் அதி உயர ரிமோட் ஆய்வுக் கூடம் 'ஹிமான்ஷ்' எங்கு சமீபத்தில் நிறுவப்பட்டது? 
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்பிடி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

IAEA என்னும் பன்னாட்டு அணுசக்தி நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது? 
பாரிஸ்


மத்திய ஓமியோபதி கவுன்சிலின் தலைமையகம் எங்குள்ளது? 
புது டில்லி

அல்மாட்டி அணை எங்குள்ளது? 
கர்நாடகா மாநிலத்தில். கிருஷ்ணா நதியில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. 

2016ம் ஆண்டின் உலக கபடியில் கோப்பை வென்ற நாடு?
இந்தியா, ஈரானை வீழ்த்தி கோப்பை வென்றது.

17 வயதுக்கு உட்பட்டவருக்கான 2016ம் ஆண்டின் பிபா கால்பந்து உலகக் கோப்பையை வென்ற நாடு? 
வட கொரியா. இந்த நாடு தான் 2 முறை இந்த கோப்பையை வென்றுள்ள ஒரே நாடாகும். 

நாட்டின் முதல் ரயில்வே பல்கலைக்கழகம் எங்கு அமைகிறது? 
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரில் அமையவுள்ளது. இது ரயில்வே தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றுக்காக இந்த பல்கலைக்கழகம் செயல்படும். 

ஹைமா என்னும் புயல் சமீபத்தில் வீசி கடுமையான சேதம் அடைந்த நாடு எது? 
பிலிப்பைன்ஸ் 

பன்னாட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் புதிய தலைவர் யார்? 
மோரினாரி வதனாபே (ஜப்பான்)

சமீபத்தில் திபெத் தலைவர் தலாய்லாமாவிற்கு கவுரவ குடியுரிமையை வழங்கிய நகரம் எது? 
இத்தாலியில் உள்ள மிலன் நகரம்

குளோபல் பவர் சிட்டி இண்டக்ஸ் எனப்படும் சர்வதேச சக்திமிக்க நகர பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் எது? 
லண்டன். 

முதல் சர்வதேச புள்ளியியல் விருதை வென்றவர் யார்? 
டேவிட் காக்ஸ் 

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.