TNPSC-General Knowledge Preparation September 2016-Part 1 (நாட்டு நடப்பு தெரியுமா உங்களுக்கு...)

* இந்தியாவின் முதல் ஜவுளி பல்கலைக்கழகம் எங்கு துவங்கப்பட உள்ளது? குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்.

* “coloursofglory.org” என்னும் இணைய தளம் எதோடு தொடர்புடையது? சமீபத்தில் குளோரி பவுண்டேஷன் என்னும் அமைப்பால் துவங்கப்பட்டுள்ள இந்த இணைய தளம் இந்திய ராணுவ வரலாற்றையும் அதன் தொன்மை மற்றும் சேவை தொடர்பான அறிய தகவல்களை கொண்டுள்ளது. நாடெங்கும் பல நகரங்களில் இது தொடர்பான நிகழ்ச்சிகளையும் இது நடத்த உள்ளது.

* மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் புதிய நல்லெண்ண துாதராக நியமிக்கப்பட்டுள்ள விளையாட்டு வீரர் யார்? ஒலிம்பிக் போட்டியில் சமீபத்தில் பாட்மிண்டன் வெள்ளி வென்ற பி. வி. சிந்து

* இந்தியாவின் முதல் ஆற்றுத் தீவு மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள மஜூலி எந்த மாநிலத்தில் உள்ளது? மிஷிங் இன பழங்குடியினர் அதிகமாக வாழும் இந்தத் தீவு பிரம்மபுத்திரா நதியாலும் லோஹித் எனப்படும் அதன் துணை நதியாலும் உருவாக்கப்பட்ட ஆற்றுத் தீவாகும். இது அசாமில் உள்ளது.

* மத்திய அரசின் உஜாலா எனப்படும் எல்.இ. டி., பல்புகளை வழங்கும் திட்டத்தில் 2 கோடி பல்புகளை வழங்கி சாதனை புரிந்துள்ள மாநிலம் எது? குஜராத். 96 நாட்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

* சொலுங் எனப்படும் பழங்குடியின திருவிழா எங்கு, எதற்காக நடத்தப்படுகிறது? அருணாச்சல பிரதேசமாநிலத்தில். இது ஒரு விவசாய திருவிழா.

* பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுலா மேம்பாட்டுக்கான மாநாடு எந்த பாரம்பரிய இடத்தில் நடைபெற்றது? மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ.

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.