TNPSC-General Knowledge Preparation November 2016-Part 4 (நாட்டு நடப்பு தெரியுமா உங்களுக்கு...)

மத்திய ஓமியோபதி கவுன்சிலின் தலைமையகம் எங்குள்ளது? புது டில்லி

அல்மாட்டி அணை எங்குள்ளது?
கர்நாடகா மாநிலத்தில். கிருஷ்ணா நதியில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டின் உலக கபடியில் கோப்பை வென்ற நாடு?
இந்தியா, ஈரானை வீழ்த்தி கோப்பை வென்றது.

17 வயதுக்கு உட்பட்டவருக்கான 2016ம் ஆண்டின் பிபா கால்பந்து உலகக் கோப்பையை வென்ற நாடு?
வட கொரியா. இந்த நாடு தான் 2 முறை இந்த கோப்பையை வென்றுள்ள ஒரே நாடாகும்.

நாட்டின் முதல் ரயில்வே பல்கலைக்கழகம் எங்கு அமைகிறது?
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரில் அமையவுள்ளது. இது ரயில்வே தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றுக்காக இந்த பல்கலைக்கழகம் செயல்படும்.

ஹைமா என்னும் புயல் சமீபத்தில் வீசி கடுமையான சேதம் அடைந்த நாடு எது?
பிலிப்பைன்ஸ்

பன்னாட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் புதிய தலைவர் யார்?
மோரினாரி வதனாபே (ஜப்பான்)

சமீபத்தில் திபெத் தலைவர் தலாய்லாமாவிற்கு கவுரவ குடியுரிமையை வழங்கிய நகரம் எது?
இத்தாலியில் உள்ள மிலன் நகரம்

குளோபல் பவர் சிட்டி இண்டக்ஸ் எனப்படும் சர்வதேச சக்திமிக்க நகர பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் எது?
லண்டன்.

முதல் சர்வதேச புள்ளியியல் விருதை வென்றவர் யார்?
டேவிட் காக்ஸ்

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.