TNPSC -General Knowledge Preparation in 2016 (நாட்டு நடப்பு தெரியுமா உங்களுக்கு...)

உலகின் மிக அதிகாரமுள்ள வி.ஐ.பிக்களின் பட்டியலில் 2016ம் ஆண்டுக்கான நபராக போர்ப்ஸ் பத்திரிகையால் தேர்வானவர் ?ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். 2ம் இடத்தை பிடித்தவர் அமெரிக்காவின் அடுத்த அதிபராகவுள்ள டிரம்ப்.

மகிளா போலிஸ் வாலன்டியர் எனப்படும் மத்திய அரசின் திட்டம் எதோடு தொடர்புடையது?
காவல்துறைக்கும் - மக்களுக்கும் இடையே சுமுகமான உறவை ஏற்படுத்துவதும் காவல் துறை மீது நம்பிக்கை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கம். இதை முதலில் செயல்படுத்திய மாநிலம் அரியானா

இந்திய வங்கிகளின் கூட்டமைப்பின் புதிய தலைவர் யார்?
வி.ஜி.கண்ணன்

மூன்றாம் பாலினத்தவருக்கான முதல் பிரத்யேக பள்ளி எங்கு தொடங்கப்பட்டது?
கொச்சி, கேரளா

யுனிசெப் அமைப்பின் புதிய தூதர் யார்?
நடிகை பிரியங்கா சோப்ரா

ஆசிய பசிபிக் பகுதியில் கார்பன் மாசு இல்லாத 2வது விமான நிலையம் எது?
ஐதராபாத் விமான நிலையம். முதல் விமான நிலையம் டில்லி.

ஐ.நா., சபையின் புதிய பொதுச் செயலராக பதவியேற்கவுள்ள அன்டோனியா கட்டார்ஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
போர்ச்சுகல்.

நியூசிலாந்தின் புதிய பிரதமர் யார்?
பில் இங்கிலிஷ்

Provide your comments about Somperi.com


Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.